Saturday, 1 December 2012

பார்த்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கு ?



இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்க நேர்கிறது என்றால் நீங்களும் ஒரு public nuisance பேர்வழி என்று எண்ணிக் கொள்ளலாம். ஒரு ‘படிச்ச ஆள்’ எப்படி தான் நடந்து கொள்ள வேண்டும்? ‘படிச்ச ஆளுக்கு’ இருக்க கூடாத தகுதிகளாக இந்த சமுதாயம் பார்ப்பது எவற்றை ?

அனாவசியமாக சாலைகளில் சண்டை வளர்ப்பது. (தெரிந்தவருடன் தான் பல சமயங்களில்)

கைபேசியில் பேசி கொண்டே சாலையை கடப்பது. (மற்றும் பல சாலை விதி மீறல்கள்)
பொது இடங்களில் புகை பிடிப்பது, சிறுநீர் கழிப்பது.

சில சமயம், யார் மீதாவது தெரியாமல் மோதி விட்டாலோ, பேருந்தில் யாருடைய காலை மிதித்து விட்டாலோ கூட ‘நீங்களே இப்புடி பண்ணா எப்புடி சார் ?’ என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள் !










தெரியாமல் தான் கேட்கிறேன் - இதெல்லாம் செய்யக் கூடாது என்று எந்த பள்ளிக் கூடத்தில் அல்லது எந்த கல்லூரியில் சொல்லி கொடுக்கிறார்கள்? யார் கற்று கொடுத்திருக்க வேண்டும் ? அவர்கள் ஏன் மறந்தனர் ?

மற்றவருடைய மனதினை புண் படுத்த கூடாது என்று நமக்கு யாரேனும் பாடம் நடத்தி தான் தெரிய வேண்டி இருக்கிறது. நாகரிக வளர்ச்சியில் நாம் செய்யும் அனைத்திற்கும் fashion என்று சொல்லி விட்டு cool ஆக திட்டையும் வாங்கி கொண்டு கடந்து சென்று விடுகிறோம்.
படிச்ச’ ஆளாக தெரிய வேண்டுமானால் மற்றவர்களுக்கு ‘பிடிச்ச’ மாதிரி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

உங்கள் சிறகுகளை விரிக்கவே வேண்டாம் என்றோ வெட்டி தூர எறிய வேண்டும் என்றோ யாரும் சொல்ல வில்லை. பக்கத்தில் பறப்பவரின் மீது படாமல் நீங்கள் தாராளமாக பறக்கலாம். இந்த வானம் (சமுதாயம்) எல்லோருக்கும் உரியது.

1 comment:

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...