இந்த வருட கவியரங்கம் தேர்ச்சிக்கு எழுதப்பட்ட 'உப்புமா'* கவிதை:
வெயிலில் காய்ந்து, காத்துக் கருத்த காற்று வெளியைக் காண,
காகிதமாய் மேகத்திடையே பறந்து சென்றேன்:
என் காதலியே உன்னைக் காண ...
அங்கே கதை சொல்லும் காது நரை ஆச்சி இல்லை,
சாய் நாற்காலியில் சாய்ந்த படி, பந்து வயிற்றில் பேரனை
சுமந்து ,
ஸ்பரிசமாடும் அப்பாரு இல்லை .
மாமனோடு களவு மணவாட முந்தினம் காத்திருந்த மாதவி இல்லை.
மறைவாய் ஒற்றர்கள் போர்க்குறி பேசிக் கொள்ளவும் இல்லை.
நாதஸ்வர நெடுந்தொடர் கதைகள் பேச பக்கத்து வீட்டு மாமிகள்
அங்கே இன்று கூடியிருக்கவில்லை!
காய்ந்து கிடக்கும் பூக்களை மலர்ப் பாதங்களால் பதம்
பார்க்கும் மழலைகள் அழுது கொண்டிருக்கவில்லை!
அடுத்த வீட்டு அருக்காணியிடம் அன்னாடம்
உறவாடும் அரும்பு முல்லை மலர்களும் இல்லை.
குத்தகைக்கு விடப்பட்ட கம்மாய் ஓரத்துப் பண்ணைவீடே!
குத்தகைக்கு விடப்பட்ட கம்மாய் ஓரத்துப் பண்ணைவீடே!
பணம் பார்க்க உன்னையும் மாற்றப்
போகிறார்களாம்
நாகரீக உணவுக் கூடமாய்...
அப்பொழுதும் முற்றமே உன்னை முத்தமிட்டே கழியும்
என் இரவு!!
-இப்படிக்கு உன் தூரத்து உறவான காதலன்,
நிலா.
பின்குறிப்பு: இந்த நிலா, மேடை ஏற தேர்ச்சி பெறவில்லை. அதனால் தான் உங்களைப் போலவே எனக்கும் இது புரியவில்லையோ ?!!

No comments:
Post a Comment