Wednesday, 13 November 2013

ஏன் ?



அவளிடம் இன்னும் சொல்லவில்லை . . .
யாருமற்ற நடை வெளியில்,
நிழல் துணை மட்டும் கொண்ட,
தூக்கமிலா தூணுக்கு உந்து கொடுத்து
கயவரைப் போல் இரா முழித்து,
வெளிச்சமில்லா வெளியை  வெறித்துக் கொண்டு
காது மடல் வலிப்பது தெரியாமல்
“ம், ம், ...., ம்: அப்புறம்” சொல்லி
அவ்வப்போழ்து வெட்கப் புன்னகை உதிர்த்து
விடிவது தெரியாமல் வறுக்க,


“இன்று அவளுடன் ஏன் சிரித்தாய் ?”
“அவள் ஏன் உன்னையேஏஏஏஏஏஏஏ பார்க்கிறாள் ?”
“இனி ‘கா’ உன் பேச்சு”
என் சொல்லி எனை ‘திக்’கிட ,
‘நீ என்னுடன் மட்டும் தான் ,,,’
‘நான் சொல்றத கேக்க போறியா இல்லையா ?’
என்றெல்லாம் உரிமையாய் அதட்டிட ,
ஊடல்களால் குளிர் காய்ந்து
உவமை ஓவியமாய் வாழ்ந்திட ;


புருவத்தின் வளைவை யொட்டி
முன் தொங்கிய முடியை
என் கைச்சிறகால் கோதி
காதிற்கு பின்னே கடத்தி
முகத்தை முன் இழுத்து
மூச்சுக் காற்றால் முகம் நுகர்ந்து
நெற்றிக்கு நடுவே ஒத்தடமாய் முத்தமிட ,
வெட்கம் மூடிய உன் விழிகளை
திட நீர் ததும்பி எழுப்ப
உள் மணி உற்சாக ஓசை அடித்து
கலர் கனவுகள் கண் முன்னே விரிய ,


காதல் என்னும் காவியத்தை
அவளிடம் மட்டும் சொல்லாமல்
கற்பனைகளில் மட்டும் வரைந்து கொண்டிருக்கிறேனே !
ஏன் ?
ஏன் ?
ஏன் ?

எனக்கென்ற “அவள்” இன்னும் வாய்க்கவே இல்லை.


ஏன் ?




1 comment:

  1. உன் கவிதைகள் தேடும் அந்த மலர், உன் கண்களுக்குள் புக, உன் கற்பணைகள் கதவு பூட்டுகின்றனவோ!!!??? தோழனே! காதலின் இன்பங்ளை விடுத்து, காதலை தேடு!!!

    ReplyDelete

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...