நான்
இலக்கணவாதி;
நீ
புதுக்கவிதை.
நான்
மழைக் காதலன்;
நீ
வெயிலைப் பருகுபவன்.
நான்
நீர் போல் எதையும் ஏற்றுக் கலங்குபவன்
நீ தீ
போல் தீயன எரித்துத் தெளிபவன்.
நான்
ஒளியோடு சேர்த்து நிழலையும் விளக்குபவன்
நீயோ
பனித்துளியில் பனையின் உருவத்தை அடக்குபவன்
நான்
நுனிப்புல் மேய்ந்து விட்டுப் பிளிறுபவன்
நீ மௌனப்
பார்வையால் அகம் அவிழ்த்துப் பார்ப்பவன்.
ஒலியை
மடக்கெனப் பருகி மயங்கிக் கிடந்தவனை
வரிகளின்
சுவையில் இசையை மென்று விழுங்க வைத்தாய்.
புலர்ந்து சாயும் பொழுதொடு
சுருங்கிய கண்களுக்கு
இரவின் வண்ணங்களை அள்ளித் தெளித்தவன் நீ.
நான்
கண்ணாடி
நீ
கலைடாஸ்கோப்
And I
always wanted one for myself.