நான் மனித இனத்திற்கு உரியவன் அல்ல.
என்னில்
மனிதனைத் தேடினால் இலக்கணங்கள் மாறும்.
இயற்கை
விதைத்த வழு உயிரி நான்.
பிழைகள்
பெற்ற பரிணாம வளர்ச்சி.
Live with the like என்றால்
யாருமில்லா தீவில் விலங்காவேன்.
அப்போதும்
நீ இருப்பாய் :
என்னை
சுற்றி.
கடற்கரையே ...
முதல் முறை ‘போலாம்’ என்று குடும்பத்தோடு கிளம்பும் போது நான் கேட்டது:
‘இன்னிக்கு ரிபப்ளிக் டே ! கேட் மூடியிருக்க மாட்டாங்காளா ?’
என் எண்ணங்கள் அன்று தான் குடியுரிமை பெற்றன.
அன்று பார்த்த பிரமிப்பு:
இன்றும் குறையவில்லை.
நான் நானாகவே இருப்பது உன் அருகில் மட்டும் தான்.
முதல் பழக்கத்திலேயே புரிந்திருக்க வேண்டும். . .
அன்று பார்த்த பிரமிப்பு:
இன்றும் குறையவில்லை.
நான் நானாகவே இருப்பது உன் அருகில் மட்டும் தான்.
முதல் பழக்கத்திலேயே புரிந்திருக்க வேண்டும். . .
உன்னோடு
எனக்கு பரிச்சயமாகி எத்தனை ஆண்டுகள் ? நான்கென்று நினைக்கிறேன்.
உன்னோடு
பேசிய நாட்களைக் கேட்டால், விரல் விட்டு எண்ணி விடுவேன்.
என்ன
தான் பேசியிருக்கிறோம் ??...?
புத்தகங்கள், என் சிக்கல், நிலா, உன் சிக்கல், படிப்பு, என் குழப்பம், எதிர்காலம், நமது குழப்பங்கள்,
ஒவ்வொரு
முறையும், ஒவ்வொரு முறையும்,
உன்னோடு
அலை பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் தட்டுத் தடுமாறி, வெட்கக் கரை தாண்டி விடுவேன்.
பேச
நீ கிடைத்து விட்டாய் என்ற உற்சாகத்தில் கொட்ட நினைத்ததெல்லாம் ஆவியாகி விடுகின்றன
என் நெஞ்சுக்குள் . . .
‘அப்புறம் என்ன’ என்று நீ கேட்கும் போதெல்லாம்,
ஆவியணுக்கள் ஒன்று கூடி உள்ளத்தைப் பொசுக்குகின்றன.
நட்புக்கும்
காதலுக்கும் நடுவில் உள்ள நூலிழையில் நாம் பயணித்திருக்கிறோம்.
நான்
ஒரு முறை உன்னிடம் அவிழ்த்து விட்ட காதல் கப்பலைக் கூட அமைதியாய் திருப்பி அனுப்பி
விட்டாய்.
மௌனம்
என்ற தண்டனையை எனக்களிப்பாய் என்று மனதொடிந்து காத்திருந்தேன்.
ஆனாலும்
உன் எண்ண அலைகள் சமூகக் காற்றை எதிர்த்து எனக்காக வீசிக் கொண்டே
தான் இருக்கின்றன.
உலகில்
தொலைத்த நிம்மதியை
உன்னில்
திரும்பப் பெறுகிறேன்.
உந்தன்
மீதம் மண்ணுலகம்.
என்னை
விடுத்தால் மட மனிதம்.
நீரும் நீயும்
போல
மனிதமும் நானும்.
உன்னோடு மணலாடி, நட்சத்திர புடைசூழ, கடலில் புதையும் சூரியனை வழியனுப்பி எத்தனை நாட்களாயிற்று ?
என்றும் போல் இன்றும்,
உன்னில் என் சுவடுகளைத் தொலைக்காமல்,
உன் சொத்தில் ஒரு பகுதி மண்ணை, உதிர்க்காமல் எடுத்துச் செல்கிறேன்.
அவ்வப் பொழுது நீ வேண்டும் . . !