அவளுக்கு
நான் வேண்டும் .
மிதமான
மாலை ;
இதமான
காற்று ,
மெலிதான
சாரல் :
சிந்திய
தேனை சுற்றி
மொய்த்திடும்
ஈக்களைப் போல
ஷேர்
ஆட்டோக்கள் சுற்றிவர ,
தொகுதிமேம்பாட்டு
நிதியின் பிச்சை கேட்டு
அரைநிர்வாணமாய்
நிற்கும் குண்டுகுழி சாலையில்
பல்லவன்
விசிறும் சேற்றிற்கு தப்பித்து
அடைக்கலம்
நாடி ஓடினோர் மத்தியில் ,
ஆனந்தக்
களிப்பில் ஆடும் பதுமையாய் ,
ஆர்ப்பரித்தாள்
கண்களை !

சத்
.. சத் .. என சொட்டும் மழை நீரில்
‘
ஜல் ஜல் ’ தாளமிடும் கால் ஜதிக்கு ,
அபிநயம்
காட்டும் V-கட் கூந்தல் ;
பூரிப்பில்
சுருங்கி விரிந்த முக வரிகள்
பசுமையும்
செழுமையும் சேர்த்தொழுகிய தேகம்
பார்வையில்
தணியாத தாகம் !
அவளை ரசித்துக் கொண்டே
காற்றில்
பறந்த மேகங்கள்
ஒன்றோடொன்று
மோதி முழங்கின
பேரிடியாய்
அவள் வரவை
பார்வையில்
பட்டவுடன் ஓடி வந்தாள் ;
ஆசையோடு தன் அருகே வரவழைத்தாள் ,
குளிர் தந்த குதூகலமோ :
என்னை
கையோடு அணைத்தாள் ...
என்
வாயோடு இதழ் பதித்தாள் ...
அவள்
எச்சில் ஈரத்தில் – என்
வெப்பம்
ஆவியாகிப் போனதே ,
என்னை
ரசித்து ரசித்து
அவள் குளிர் காய்கிறாளோ !
என்னை
நனைய விட்டு
கொட்டும்
மழையின் ஒரு
சொட்டை
பருக வைத்தாள்
ஆ
! அலாதி மழையின் சுவை !!
சட்டெனப்
பிரிந்தாள் காசை திணித்து
என்
மன/ணம் திருடிக் கொண்டு .
மறுமுறை
ஒன்றில்லாவிட்டாலும்
அவள்
சுவை மறவேன் நான்
பிறிதொரு
மழையில் சந்திக்கும் வரை !
இப்படிக்கு,
ஒரு
காபிக் குவளை,
சாலையோர கடை.
