Exaggeration. தமிழ் வார்த்தை இணையான பொருளை தராது என்று நினைக்கிறேன்.
குழந்தை பருவத்திலேயே நாம் எதைக் கண்டால் சந்தோஷப்பட வேண்டும், எதைப் பார்த்தால் பயப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்டு விடுகிறது.
பல சூழல்கள் செதுக்கிய சிலை தான் நாம்.
நான் இப்படித் தான் என்று வரையறுத்துக் கொள்ளாதீர்கள்.
இன்னும் பலவாறு மாறுவோம்.
மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது.
சமீபத்தில் படித்த சில வரிகள் . . .
‘ “இது சாமி. கும்பிட்டுக்கோ” என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது ஆரம்பமாகிறது மதம் என்னும் பாகுபாடு’

குழந்தை பருவத்திலேயே நாம் எதைக் கண்டால் சந்தோஷப்பட வேண்டும், எதைப் பார்த்தால் பயப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்டு விடுகிறது.

நமது அம்மா “ அங்க பாரு! அங்க பாரு! ஐ யான ” என்று வேடிக்கை காட்டிய போது யானை எவ்வளவு பெரிய உருவமாய் இருந்த போதும் அதன் மேல் ஓர் ஈர்ப்பு தோன்றியது. “ஐயே ! கைய எடு அத எல்லாம் தொடக்கூடாது” என்ற போது தெரு நாய் கூட தீண்டத்தகாததாக தெரிந்தது.
சிறு வயதில் படித்த கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.
ஊருக்குள் புதியதாய் குதிரைக்காரன் வந்தான். அவனது குதிரை கொஞ்சம் வித்தியாசமானது. விசித்திர குணமுடையது.
குதிரைக்காரன் ஒரு நாள் ஒரு வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு, இங்கே புதையல் இருக்கிறதா ? என்று கேட்டான். குதிரை ஆம் என்பது போல் தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி கனைத்தது. வீட்டின் சொந்தக்காரன் உடனே அந்த இடத்தைத் தோண்டி ஒரு குவலை நிறைய நெல் மணிகளைக் கண்டெடுத்தான். முன்னோர் புதைத்து வைத்த மதிப்பிட முடியாத சொத்தாகக் கருதிய வீட்டின் சொந்தக்காரர் குதிரைக்காரனுக்கு பத்து பொற்காசுகள் பரிசாகத் தந்தார்.

பல நாட்கள் சென்றன. ஒவ்வொரு நாளும் குவலையிலிருந்து தேன், வரகு, என்று புதையல் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு முறை முன்னோரின் மூச்சுக் காற்று கூட புதையலாகக் கிடைத்தது!!!
கொஞ்சம் கொஞ்சமாக உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஒவ்வொரு நாள் இரவும் குதிரைக்காரன் ஒரு வீட்டின் பின்னால் புதைத்தவற்றைத் தான் அடுத்த நாள் பாசாங்கு செய்து எடுத்துக் காட்டினான்.
அவனது கண்கள் விரியும் போதெல்லாம் குதிரை கனைத்தது.
இது போலத் தான் நாமும் ஒரு வளர்ப்புப் பிராணியாக வளர்ந்திருக்கிறோம். எந்த இடத்தில் எப்படி react செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறோம்.
“ஐ! ஐ! ” என்று ஒவ்வொரு முறை சொன்ன போதும் நமக்கு புரியாத விஷயங்களுக்காக சிரித்திருக்கிறோம். அழுகையை நிறுத்தி விட்டு சமாதானமாய் போயிருக்கிறோம்.
பல சூழல்கள் செதுக்கிய சிலை தான் நாம்.
நான் இப்படித் தான் என்று வரையறுத்துக் கொள்ளாதீர்கள்.
இன்னும் பலவாறு மாறுவோம்.
மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது.
